எம்மைப் பற்றி

ஃபியூச்சர் லைஃப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (FLi) நுண்கடன் துறையை  முன்நோக்கி கொண்டு செல்வதற்க்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும், எனினும் கடன் துறையை மட்டுமன்றி மேலும் பல விடையங்களை வழங்கி வருகின்றது. இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள எமது நிறுவனம், அனைவருக்கும், குறிப்பாக பின்தங்கிய நிலையில் இருக்கும் தொழில்முனைவோருக்கு சம வாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. எமது  அணுகுமுறையானது  பாரம்பரிய நுண்கடன் துறைக்கு அப்பாற்பட்டதாக இருப்பதுடன், சேமிப்பு மற்றும் முதலீட்டை கட்டாயப்படுத்தி, வெளிப்படையான விதிமுறைகளை உறுதி செய்து நிதி தேவையுடையோருக்கு வலுவான ஆதரவை வழங்குகின்றது. சவால்களை சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு தேவையான உத்வேகத்தை வழங்குவதுடன், பொருளாதார நெருக்கடிகளிலும் கூட பின்னடைவு இல்லாமல் வளர்ச்சியை நோக்கி நகர உதவுகின்றோம். இலகுவான அணுகல்தன்மை, உள்ளடக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றில் உறுதிபூண்டுள்ள FLi நிறுவனம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளதுடன், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக திகழ்கின்றது.  தொழில் துறைகளுக்கு நிதியியல் உதவியை வழங்குவது மட்டுமின்றி வாடிக்கையாளர்களுடைய வாழ்க்கையை வளம் பெற செய்வதுடன், செழிப்பான எதிர்காலத்தையும், வலுவான, நிலையான சமூகங்களை உருவாக்குவதில் அக்கறைகொள்கின்றோம்.

வரலாறு

2016 ஆம் ஆண்டு இலங்கையின் கம்பஹாவில் நிறுவப்பட்ட ஃபியூச்சர் லைஃப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (FLi)  நுண்நிதியை மாற்றியமைத்து பொருளாதார வலுவூட்டலை ஊக்குவித்தல் எனும் ஒற்றை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் துரிதமாக  36 கிளைகளாக விரிவுபடுத்தபட்டது, இப்போது பல கிளைகளுடன் நாடு முழுவதும் 80,000 வாடிக்கையாளர்களுக்கு பெருமையுடன் சேவை வழங்கி வருகின்றோம்.

FLi  இன் பயணம் புதுமை, சமூகப் பொறுப்பிற்கான அர்ப்பணிப்பு மற்றும் சமூக வளர்ச்சியில் இடைவிடாத கவனம் ஆகியவற்றை முதன்மையாக கொண்டுள்ளது. கல்வி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுடன் நிதிச் சேவைகளைக் கலப்பதன் மூலமம், எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும் அதனை மாற்றியமைப்பதன் மூலமும் நாங்கள் இந்த வளர்ச்சியை கண்டுள்ளோம். நமது வரலாறு என்பது வளர்ச்சி மட்டுமல்ல; நாங்கள் சேவை செய்யும் சமூகங்களில் அர்த்தமுள்ள, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பின் அதி உன்னத சான்றாகும்.

எதிர்காலத்தை வளப்படுத்த எண்ணுவோருக்கு பக்கபலமாவோம்!

தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இடைவிடாமல் முன்னேற்றத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிர்காலம் மகத்தான ஆற்றலைக் கொண்டதாக அமைகிறது. புதிய வழிகள், சந்தர்ப்பங்கள் மற்றும் வாய்ப்புகளை ஆராய்வது நம்பமுடியாத அற்புதமான மற்றும் வியக்க வைக்கும் சாதனைகளுக்கு வழிவகுக்கும், எதிர்காலத்தை வளப்படுத்தும். எதிர்காலத்தை வளப்படுத்தும் எண்ணம் கொண்ட நபர்கள், முன்கூட்டியே சிந்தித்து, வரவிருப்பதைத் திட்டமிடுபவர்கள், சரியான நேரத்தில் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதன் மூலம் தங்கள் சொந்த வாழ்க்கையையும் தங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகின்றனர்..

 

ஃபியூச்சர் லைஃப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் அல்லது FLi , அத்தகைய எதிர்கால எண்ணம் கொண்ட நபர்களுக்கு பக்கபலமாக அமைகிறது. அபிலாஷைகள் மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் திட்டங்களால் உந்தப்பட்டு, ஒளிமயமான எதிர்காலத்திற்கான பாதையில் பயணிப்பவர்களுக்கு FLi ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது.

எமது நோக்கம்!

“மதிப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகள் மூலம் வாழ்க்கையை வளப்படுத்துவது.”  எமது நோக்கமாகும். எமது நுண்ணிதியியல் துறைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும் என்பது சிறப்பம்சமாகும். இந்த உன்னத எண்ணக்கருவை நோக்கமாக கொண்டே நாம் செயற்படுகின்றோம்.

எமது அணுகுமுறை

எங்களின் தனித்துவமான அணுகுமுறை, சேமிப்பு மற்றும் முதலீடுகளை அவசியமாகும் தன்மை, விதிமுறைகளில் தெளிவான திட்டம், விரிவான ஆதரவு என்பன பாரம்பரிய நிதிச் சேவைகளை விட மாறுபடுகிறது. கடினமான பொருளாதார சூழ்நிலைகளிலும் சவால்களை எதிர்கொள்ளவும், பின்னடைவு நேரங்களிலும் அபிவிருத்தியில் அக்கறை செலுத்தவும்  எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் ஆற்றலை வாழ்நகுகின்றோம்.  அணுகல், உள்ளடக்கம் மற்றும் நேர்மை மற்றும் எங்கள் அர்ப்பணிப்பு கொண்ட  FLi நிறுவனம் நம்பிக்கையின் அடையாளமாகவும் சமூக பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாகவும் திகழ்கின்றது. வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கு நிதியுதவி செய்வது மற்றுமின்றி எங்கள் வாடிக்கையாளர்களின்  வாழ்வை செழிப்பாக்க உதவுவதன் மூலம், பிரகாசமான எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்குவதுடன், பொருரளாதார ரீதியில் தன்னம்பிக்கைகொண்ட  வலுவான சமூகங்களை உருவாக்கவும் உறுதிகொண்டுள்ளோம். 

எமது மதிப்புகள்

ஒரு அமைப்பாக நாங்கள் நம்பும் மதிப்புகள் மற்றும் கருத்துக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் உன்னத முயற்சி.

 

உங்கள் வெற்றியே எங்கள் சாதனை, எங்கள் அயராத முயற்சிகள் ஒவ்வொன்றும் உங்கள் வெற்றிக்கு வித்திடும்.

எங்களின் அர்ப்பணிப்பும் அனைத்து முயற்சிகளும், உங்கள் வாழ்வை, பொருளாதார நிலையை வளமிக்கதாக்க, தேவையான வழிகாட்டுதல்களை, ஆலோசனைகளை மற்றும் நிதி உதவிகளை வழங்குவதில் முதலீடு செய்யப்படுகின்றன.

 

உங்கள் எண்ணங்கள், கனவுகள் மற்றும் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேறும் வண்ணம், எங்கள் ஊக்குவிப்பும், முதலீடுகளும் இருக்கும் என்பதுடன், உங்கள் தேவைகளை நன்கறிந்து நாம் செயற்படுவோம்.

வெற்றிக்கான எங்கள் செய்முறையில் வெளிப்படைத்தன்மை ஒரு முக்கிய மூலப்பொருளாகும் என நாங்கள் கருதுகிறோம், ஏனெனில் இது நம்பிக்கையை வளர்க்கவும் உங்களுடன் வலுவான பிணைப்பை உருவாக்கவும் உதவுகிறது.

பணிப்பாளர்கள் குழு

தனுஷ்க உடுகம

பிரதான நிறைவேற்று அதிகாரி

சஞ்சய ஜயவீர

தலைமை செயற்பாட்டு அதிகாரி

கசுன் பெரேரா

தலைமை நிர்வாக அதிகாரி / தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி