எங்கள் அணுகுமுறை

எங்கள் அணுகுமுறை நெறிமுறை நடைமுறைகள், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் புதுமையான தீர்வுகளை ஒருங்கிணைத்து நிலையான மேம்பாடு மற்றும் சமூக அபிவிருத்தியை ஊக்குவிக்கிறது.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எவ்வாறு சேவை செய்கிறோம்

FLi தனிப்பயனாக்கப்பட்ட நிதிச் சேவைகளை வழங்குகிறது, சமூக வளர்ச்சியை தரும், நெறிமுறை நிதியுதவியை நடைமுறைப்படுத்துகிறது, சந்தை சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதுடன் மூலோபாய உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்க்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுத்து, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, அணுகல், சமபங்கு மற்றும் தாக்கத்தை உறுதிசெய்து, நுண்நிதித் தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.

நிதியியல் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் தொழில் முனைவோருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்தி, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல்.

மிக உயர்ந்த நெறிமுறை தரங்களுக்கு இணங்க, சமூகப் பொறுப்பை ஊக்குவிக்கும் வெளிப்படையான நிதியியல் தெரிவுகளை நாங்கள் வழங்குகிறோம்.

சிக்கலான நிதிச் சவால்களைத் தீர்க்க புதுமையான யுத்திகளை பயன்படுத்தி, பல்வேறு சந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.

எங்கள் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் எங்கள் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச நட்பு நாடுகளுடன் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குதல்.

எங்கள் ஊழியர்களை நாம் நடத்தும் விதம்.

FLi இல், நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு அவர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறோம்,   சிறந்த பணி கலாச்சாரத்தை வளர்ப்பதுடன், நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிகின்றோம், அவர்களின் சாதனைகளுக்கு வெகுமதி அளிக்கிறோம் மற்றும் மதிப்புமிக்க மற்றும் ஆற்றல்மிக்க பணியிடத்திற்கு ஏற்ற, வெளிப்படையான தகவல்தொடர்புகளை நிலைநிறுத்துகிறோம்.

தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவித்தல், தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் மூலம் எங்கள் ஊழியர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம்.

பன்முகத்தன்மை மதிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு குரலும் கேட்கப்படும் சிறந்த பணியிடமாக  நாம் உருவாக்குகிறோம், இது ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மிக்க சூழலை வளர்க்கிறது.

எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, நாங்கள் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குகிறோம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துகிறோம்.

கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புகளை கருத்திற்கொள்வதுடன்,  எங்கள் ஊழியர்களின் சாதனைகள் மற்றும் மைல்கற்களுக்கு அங்கீகாரம் மற்றும் நியாயமான வெகுமதிகளை வழங்குகிறோம்.

வெளிப்படைத்தன்மையின் நெறிமுறையைப் பேணுவதன் மூலம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மதிப்புமிக்க  கலாச்சாரத்தை உறுதிசெய்து, வெளிப்படையான உரையாடல் மற்றும் கருத்துக்களை பகிர்வதை  ஊக்குவிக்கிறோம்.