பெண்களை வலுப்படுத்தும் சிறு கடன்

இலங்கைப் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தொழில் ஒன்றை தொடங்குவதற்கும் விஸ்தரிப்பதற்கும் அணுகக்கூடிய நுண் கடன்களை வழங்கி, நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவித்தல்.

பெண்களின் தொழிற்துறையை வலுவூட்டும் நுண்கடன் திட்டமானது, இலங்கைப் பெண்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சியை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பாக தங்கள் வர்த்தகர்களை நிறுவ அல்லது வளர்க்க ஆர்வமுள்ள பெண்களின் குழுக்களை முன்னிலைபடுத்தி செயற்படுகிறது. 9 முதல் 30 பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாக  ‘சென்டர்’களை உருவாக்குகிறது. இந்த மையங்கள் ஆதரவு அமைப்புகளாக செயல்படுகின்றன, உறுப்பினர்கள் கூட்டாக கடன் பெற்றுக்கொள்ளவும் மற்றும் ஒருவரின் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவுகிறது.

இந்த முன்முயற்சியின் மூலம், குழு உறுப்பினர்கள் நிதி உதவியைப் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூகங்களுக்குள் பகிரப்பட்ட அறிவு, வாய்ப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தெரிவுநிலை ஆகியவற்றிலிருந்தும் பயனடைய முடிகிறது.

முக்கிய அம்சங்கள்

  • பரஸ்பர ஆதரவு மற்றும் பொறுப்புக்கூறல் கொண்ட குழு அடிப்படையிலான கடன்.

 

  • சிறிய அளவிலான வணிகத் தேவைகளுக்கு ஏற்ப கடன் தொகைகள்.

 

  • குறைந்தபட்ச ஆவணங்களுடன் எளிமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப செயல்முறை.

நன்மைகள்

  • வழக்கமான பிணை முறை இல்லாமல் பெண்களுக்கான கடன் அணுகலை மேம்படுத்துகிறது.

 

  • சமூகம் சார்ந்த வளர்ச்சி மற்றும் பெண்களின் பொருளாதார பங்கேற்பை ஊக்குவிக்கிறது.

 

  • பெண் தொழில்முனைவோர்களிடையே தொழில்சார் வலையமைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்குகிறது.

தகுதி வரம்பு

  • பெண் விண்ணப்பதாரர்கள் 9 முதல் 30 வரையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்குதல் வேண்டும்.

 

  • சிறு வணிகத்தைத் ஆரம்பிக்க அல்லது விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுபவராக இருத்தல் வேண்டும்.

 

  • முறையான நிதி பின்புலம் அல்லது பிணை தேவையற்றது.